டாஸ்மாக் விவகாரம் - ஆகாஷ் பாஸ்கரனுக்கு தொடர்பா?: ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவு


Akash Bhaskars connection in Tasmac case? - Court order to Enforcement Department to file documents
x

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு , அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

இதனை எதிர்த்து, ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் எதன் அடிப்படையில் விசாரணை? , விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, சீல் வைக்க என்ன அதிகாரம் இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை 17-ம் தேதி (இன்று) ஒத்திவைத்தார். இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story