தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. சீறி வரும் காளைகளை அடக்கும் காளையர்கள்

ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
Published on

மதுரை,

மதுரையில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதற்கட்டமாக கோவில் காளைகள் அவிழ்க்கப்பட்டது. இதன் பின்னர் வரிசையாக காளைகள் அவிழ்க்கப்பட்டு வருகின்றன. சீறும் காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து 6,500 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதில் சிறந்த 1,100 காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. 600 மாடுபிடி வீரர்கள் களம் இறங்குகின்றனர்.

போட்டியில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்படுகிறது. 2-ம் பரிசு பெறும் மாடுபிடி வீரர், காளைகளுக்கு பைக்குகளும் பரிசாக வழங்கப்பட உள்ளன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com