அகில இந்திய இந்து மகா சபா மாநில இளைஞரணி பொதுச்செயலாளரின் கார் கண்ணாடி உடைப்பு

அகில இந்திய இந்து மகா சபா மாநில இளைஞரணி பொதுச்செயலாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
அகில இந்திய இந்து மகா சபா மாநில இளைஞரணி பொதுச்செயலாளரின் கார் கண்ணாடி உடைப்பு
Published on

திருச்சி மலைக்கோட்டை கட்டில் பாறை சந்தை பகுதியை சேர்ந்தவர் எஸ்.பி.ராகுல் (வயது 36). இவர் அகில இந்திய இந்து மகா சபா அமைப்பின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது காரை வீட்டின் அருகே முனீஸ்வரன் கோவில் பக்கத்தில் நிறுத்தி இருந்தார். அப்போது, அங்கு சிலர் மதுபோதையில் ராகுலிடம் தகராறு செய்தனர். இதனிடையே அவர்களில் ஒருவர் ராகுல் காரின் பின்பகுதியில் உள்ள கண்ணாடியை கையால் அடித்து உடைத்துள்ளார். இது குறித்து ராகுல் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து மலைக்கோட்டை அரச மர தெருவை சேர்ந்த ராஜ்மோகன் (22) என்பவரை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com