முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று எம்.பி.க்கள் கூட்டம்: அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட நிபந்தனை விதித்துள்ளதால், தி.மு.க. எம்.பி.க்களும் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று எம்.பி.க்கள் கூட்டம்: அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடக்கும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்​-அமைச்சர் விஜய்

தொகுதி மறு​வரையறை மசோதா குறித்து விவா​திப்​ப​தற்​கான அனைத்​துக் கட்​சிகளின் எம்​.பி.க்​கள் கலந்​தாய்​வுக் கூட்​டம் முதல்​-அமைச்சர் விஜய் தலை​மை​யில் சென்​னை​யில் இன்று (சனிக்கிழமை) நடை​பெறுகிறது.

தொகுதி மறு​வரையறை மசோ​தா

நாடாளு​மன்​றத்​தின் மழைக்​காலக் கூட்​டத்​தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இதில் திருத்​தப்​பட்ட தொகுதி மறு​வரையறை மசோ​தாவை மீண்​டும் கொண்​டுவர மத்​திய அரசு முயற்​சிப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி​ இருந்தன.

எம்​.பி.க்​கள் ஆலோ​சனைக் கூட்​டம்

இந்​த சூழலில் தொகுதி மறு​வரையறை பணி​கள் குறித்து விவா​திப்​ப​தற்​காக தமிழக எம்​.பி.க்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​துக்கு முதல்​-அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்​திருந்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்டிருந்த அறி​விப்​பில், “மத்​திய அரசால் மேற்​கொள்ள உத்​தேசிக்​கப்​பட்​டுள்​ள தொகுதி மறு​வரையறை பணி​கள் மற்​றும் அதனால் தமிழகத்​துக்கு ஏற்​படும் தாக்​கங்​கள் குறித்​து, மாநில எம்​.பி.க்​களின் கலந்​தாய்​வுக் கூட்​டம் இன்று (சனிக்​கிழமை) மதி​யம் 3 மணிக்கு சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் நடத்​தப்பட உள்​ளது. இதற்கு முதல்​-அமைச்சர் விஜய் தலைமை வகிப்​பார். இதற்​கான அழைப்​பிதழ் டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு இல்​லத்​தின் மூலம் அனைத்து மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை உறுப்​பினர்​களுக்கும் அனுப்​பப்​பட்டு வரு​கிறது” என்று கூறப்​பட்டிருந்தது.

அ.தி.மு.க. பங்கேற்காது

இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக இன்று முதல்-அமைச்சர் விஜய் கூட்டியுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பிதுரை, இன்பதுரை உள்ளிட்டோர் டெல்லியில் உள்ளதாக தெரிகிறது.

தி.மு.க. பங்கேற்காது

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட நிபந்தனை விதித்துள்ளதால் தி.மு.க. எம்.பி.க்களும் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தை தி.முக. புறக்கணித்துள்ளது

இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எம்.பி.க்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது” என்று தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க.

இதேபோல தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் தே.மு.தி.க. பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எம்.பி. சுதீஷ் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம்

தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கவில்லை. மக்கள் நீதி மய்யத்தின் ராஜ்ய சபா எம்.பியான கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகள்

அமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.

இதன்படி இக்கூட்டத்தில் பின்வரும் கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்:

காங்கிரஸ் - 12

வி.சி.க. - 2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) - 2

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) - 1

ம.தி.மு.க. (MDMK) - 1

தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. மற்றும் மக்கள் நீதி மய்யம் (MNM) ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com