சனாதன கோட்பாட்டில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

சனாதன கோட்பாட்டில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
சனாதன கோட்பாட்டில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
Published on

சென்னை,

சென்னையில் மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீவைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தகத்தை வெளியிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

அய்யா வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தை காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றினார். சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் பாரதத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். அந்த ஒற்றுமை கிழக்கிந்திய கம்பெனிக்கு சவாலாக இருந்தது.

திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. ஜி.யு.போப், கால்டுவெல் போன்றவர்கள் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள். மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றவே அவர்கள் இந்தியா வந்தனர்.

எனக்கு இயேசுவும் பிடிக்கும், பைபிளும் பிடிக்கும். ராமேஸ்வரம், காசி ஆகியவை ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொதுவானவை. ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் சனாதன தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com