தமிழகத்தில் அனைத்து காவல் சிறப்பு படைகளும் தயார் நிலையில் இருக்க டி.ஜி.பி. உத்தரவு

தமிழகத்தில் அனைத்து காவல் சிறப்பு படைகளும் இன்றும், நாளையும் தயார் நிலையில் இருக்குமாறு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அனைத்து காவல் சிறப்பு படைகளும் தயார் நிலையில் இருக்க டி.ஜி.பி. உத்தரவு
Published on

சென்னை:

இன்றும், நாளையும் நகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் மற்றும் கமாண்டோ உள்ளிட்ட அனைத்து சிறப்பு காவல் படைகளும் தயார் நிலையில் இருக்குமாறு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அசாதாரண சூழ்நிலைகளில் பிறப்பிக்கப்படும் இதுபோன்ற உத்தரவு தற்போது திடீரென வெளியாகியுள்ளதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விடுப்பில் சென்றுள்ள காவலர்கள் உடனடியாக முகாம்களுக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com