சென்னை மாநகராட்சி வார்டு மேம்பாட்டு நிதியாக ரூ.60.60 கோடி ஒதுக்கீடு

2026-2027 ஆம் ஆண்டிற்கான மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டிற்கு முதற்கட்டமாக ஒவ்வொரு வார்டிற்கும் தலா ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி
Published on: 

சென்னை,

சென்னை மாநகராட்சி வார்டு மேம்பாட்டு நிதியாக ரூ.60.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஒதுக்கீடு

சென்னை மாநகராட்சி மண்டலங்களில் (1 - 15) மாமன்ற உறுப்பினர்களால் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் வார்டு மேம்பாட்டு திட்டபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2026-2027 ஆம் ஆண்டிற்கான மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டிற்கு முதற்கட்டமாக ஒவ்வொரு வார்டிற்கும் தலா ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உத்தரவிடப்படுகிறது,

பணிகள்

எனவே, வடகிழக்குப் பருவமழை தொடர்பாக கீழ்காணும் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக மாமன்ற உறுப்பினர்களிடமிருந்து மண்டல அலுவலர்கள் (மண்டலம் 1 - 15 வரை) உரிய பரிந்துரைக் கடிதம் பெற்று வட்டார துணை ஆணையர் ஒப்புதலுடன் அதற்கான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

* சாலை மேம்படுத்துதல் பணிகள் & புதிய சாலைகள் அமைத்தல்

* நிவாரண முகாம்கள் / நிவாரண சமையலறைகளை மேம்படுத்துதல் மற்றும் புனரமைத்தல்.

* அதிக அளவில் வெள்ளநீர் தேங்கும் பகுதிகளில் Hume Pipes பொருத்துதல்.

* வார்டுகளுக்குத் தேவையான மின் மோட்டார்களை கொள்முதல் செய்தல் அல்லது வாடகை அடிப்படையில் பயன்படுத்துதல்.

* வார்டுகளுக்குத் தேவையான இடங்களில் Sump மற்றும் Pump அமைத்தல்.

* படகுகளை கொள்முதல் / வாடகைக்கு ஏற்பாடு செய்தல்.

* வெள்ளப் பெருக்கின் போது நீர் வெளியேறும் அபாயம் உள்ள நீர் வழிக்கால்வாய் / பெரிய கால்வாய்களில் கரை தடுப்புச்சுவர் அல்லது பக்கவாட்டுச்சுவர் அமைத்தல்.

* மழைநீர் சேகரிப்புப் பணிகள்

* சுரங்கப் பாதைகளை மேம்படுத்துதல்

* மழைநீர் தேங்கும் இடங்கள் / பொது இடங்களில் CCTV கேமராக்கள் பொருத்துதல்.

மேலும், வடகிழக்குப் பருவமழை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பிரதான பணிகளான விடுபட்ட மழைநீர் இணைப்பு பணிகள் (Missing Links), புதிய / கூடுதல் வண்டல் சேகரிப்பு தொட்டிகள் (Silt catch pit), கற்காரைக்குழாய் (Hume pipe) அமைத்தல் மோட்டார், ஜெனரேட்டர், எலக்ட்ரிகல் வேலைகள், நிவாரண மையங்களில் மேம்பாட்டு பணிகள், மைய சமையல் கூடங்கள் (cluster kitchen) போன்ற பணிகளும் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படும் பணிகளை நிதித்துறை வழிகாட்டுதல் மற்றும் Tender Transparency Act 1998, விதிகள் 2000ன் படி மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com