

சென்னை,
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
சமத்துவம், சமூக நீதி, மானுடப்பற்று ஆகியவற்றின் சின்னமாக விளங்கிய சட்டமேதை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
அவரின் சிந்தனைகளும், அரசியல் பார்வையும் இந்திய அரசியலமைப்பின் அடித்தளமாக அமைந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியது.
சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இந்நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.