தமிழகத்தின் கள நிலவரம் அமித்ஷாவுக்கு தெரியவில்லை - அமைச்சர் ரகுபதி விமர்சனம்


தமிழகத்தின் கள நிலவரம் அமித்ஷாவுக்கு தெரியவில்லை - அமைச்சர் ரகுபதி விமர்சனம்
x

கோப்புப்படம் 

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தூங்கிக்கொண்டே பகல் கனவு காண்கிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய சித்தன்னவாசல் கோடை விழாவின் இரண்டாம் நிகழ்வு இன்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தூங்கிக்கொண்டே பகல் கனவு காண்கிறார். தமிழகத்தின் கள நிலவரம் பற்றி அவர் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. மற்ற மாநிலங்களை போல தமிழகத்தை நினைத்து கொண்டிருக்கிறார். மற்ற மாநிலங்களை தமிழகத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறார். அவரது நினைப்பு, விருப்பம் என்பது ஒரு சதவீதம் கூட தமிழகத்தில் கிடையாது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் வருவாய் எவ்வளவு இருந்தது? தற்போது தமிழகத்தின் வருவாய் மத்திய அரசுக்கு எவ்வளவு செல்கிறது? என்பதை தெரிவித்துவிட்டு தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். மத்திய அரசு பெற்று வரும் நிதி அளவுக்கு தமிழகத்துக்கு திருப்பி தருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story