புதுகோட்டையில் 4-ம் தேதி கூட்டணி தலைவர்களுடன் அமித்ஷா பிரசாரம்


புதுகோட்டையில் 4-ம் தேதி கூட்டணி தலைவர்களுடன் அமித்ஷா பிரசாரம்
x

தமிழகம் வருகை தரும் அமித்ஷா கூட்டணியில் சில கட்சிகளை இணைப்பதற்கான வேலைகளை தொடங்குவார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகம் வருகை தரும் அமித்ஷா கூட்டணியில் சில கட்சிகளை இணைப்பதற்கான வேலைகளை தொடங்குவார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயராகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் வகையில் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.இந்தநிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் திமுகவை வீழ்த்துவதுடன், வலுவாக காலூன்றும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. அதற்கேற்றவாறு சமீபத்தில் மதுரையில் தென்மாவட்ட பாஜக நிர்வாகிகளை மத்திய மந்திரி அமித்ஷா சந்தித்து பேசினார். அதேபோல் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பாஜக தலைமை மத்திய மந்திரி பியூஷ் கோயலை களம் இறக்கி உள்ளது.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் ஆலோசனையின்படி அதிமுக பாஜக கூட்டணியை பலப்படுத்தும் முய்ற்சியில் பியூஷ்கோயல் ஈடுபட்டு உள்ளார். இந்த கூட்டணியில் பிற கட்சிகளை சேர்ப்பதற்கான பணிகளும் திரைமறைவில் நடைபெற்று வருகிறது.இந்த பரபரப்பான சூழலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற 4-ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த அக்.12-ம் தேதி மதுரையில் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தேர்தல் ப்ரிஅசார யாத்திரை நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.

இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 4-ம் தேதி திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டக்கு சென்று நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசார நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.இதற்காக நத்தம் பண்ணை ஊராட்சி பள்ளத்திவயல் பகுதியில் 60 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி , தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரனின் பிரசார பயண நிறைவு விழாவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் ப்ரிஅசார பொதுக்கூட்டமாகவும் நடைப்றும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

புதுக்கோட்டை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருச்சி வரும் அமித்ஷா இரவு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோர்ட் மாரியாட் ஓட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார். பின்னர் மறுநாள் (5-ந்தேதி ) ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் திருச்சியில் நடைபெறும் 'நம்ம ஊரு மோடி ஜி' பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். 1000 பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிடும் இந்த நிகழ்ச்சி மன்னார் புரம் நான்கு ரோட்டில் அமைந்து உள்ள ராணுவ மைதா னத்தில் நடைபெறுகிறது. இதற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டார்.

அமித்ஷா பங்கேற்கும் இந்த பொங்கல் விழாவில் ஆயிரம் பெண்கள் பங்கேற்க உள்ளனர். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகை தரும் அமித்ஷா, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் சில கட்சிகளை இணைப்பதற்கான வேலைகளை தொடங்குவார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கூட்ட ணியை உறுதி செய்யாமல் இருக்கும் தே.மு.தி.க., அ.தி. மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பா ளர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் களை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 More update

Next Story