அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கூட்டம்

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கூட்டம்
Published on

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் பூங்கொடி முருகு முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் விமல்குமார் வரவேற்றார். கூட்டத்தில், பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தை வரவேற்றும், கலைஞரின் நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதியில் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கிய தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் அசோக்குமார் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை நிலைய எழுத்தர் அசோகன் நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com