"மீண்டும் இணைய தூது..?" "ஈபிஎஸ் ஒரு பொய் மூட்டை..!" 4 வார்த்தை நறுக்கென பேசிய ஓபிஎஸ்

பழனிச்சாமி தினந்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்துக்கொண்டு இருப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.
"மீண்டும் இணைய தூது..?" "ஈபிஎஸ் ஒரு பொய் மூட்டை..!" 4 வார்த்தை நறுக்கென பேசிய ஓபிஎஸ்
Published on

சென்னை,

மதுரையில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், நீங்கள் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு தூது விடுத்து உள்ளதாக இபிஎஸ் பல மேடைகள் கூறியுள்ளார். அதுபற்றிய கருத்து என்ன என கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், பழனிச்சாமி தினந்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்துக்கொண்டு இருக்கிறார். அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பது திருச்சி மாநாட்டில் நிரூபனமாகி உள்ளது. அடுத்த மாநாடு விரைவில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com