சென்னையில் பிரபல ஹோட்டலில் அதிர்ச்சி சம்பவம்: பெண் தோழியுடன் 2 நாட்களாக தங்கியிருந்த ஐ.டி ஊழியர்; நிர்வாணமாக மற்றவரின் அறைக்குள் புகுந்ததால் பரபரப்பு

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில், மதுபோதையில் நிர்வாணமாக சுற்றிய நபர் ஒருவர், மற்றவரின் அறைக்குள் நுழைந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னையில் பிரபல ஹோட்டலில் அதிர்ச்சி சம்பவம்: பெண் தோழியுடன் 2 நாட்களாக தங்கியிருந்த ஐ.டி ஊழியர்; நிர்வாணமாக மற்றவரின் அறைக்குள் புகுந்ததால் பரபரப்பு
Published on

சென்னை,

சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில், வட மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், அவர்களது அறைக்குள் இளைஞர் ஒருவர் முழு நிர்வாணத்துடன் உள்ளே நுழைந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்கள் கூச்சலிட்டதோடு, அந்த இளைஞரை மடக்கிப் பிடித்துள்ளனர். கூச்சல் சத்தம் கேட்டு மற்ற அறைகளில் இருந்து வெளியே வந்த வாடிக்கையாளர்கள், நீண்ட நேரமாக அந்த இளைஞர் நிர்வாணமாக சுற்றுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்ததால், காவல்துறையை வரவழைத்து, அந்த இளைஞரை ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த இளைஞர் ஓஎம்ஆர் பகுதியை சேர்ந்த ஐ.டி ஊழியர் என்பதும், பெண் தோழியுடன் 2 நாட்களாக தங்கியிருந்ததும் தெரிய வந்தது.

மேலும், போதையில் இருந்ததால் நிதானமின்றி இவ்வாறு செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com