மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி முதியவர் பலி

மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி முதியவர் பலி
Published on

மீஞ்சூர் ரெயில் நிலைய நடைமேடையில் பயணிகள் ரெயிலுக்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று கும்மிடிப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். இதில் வேகமாக வந்த ரெயில் மோதி அவர் தூக்கி வீசப்பட்டத்தில் துடிதுடிக்க அங்கேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கொருக்குப்போட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான முதியவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com