

சென்னை,
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணத்தை த.வெ.க. அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் என்பது எழுத்தாளர்களுக்கான சரணாலயமாக திகழ்கிறது. மக்களின் வாழ்வை எழுதுபவர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சிகளை நடத்த பெரிதும் விரும்புகிறார்கள். மேலும், கல்வித்துறை சார்ந்து பல தொடக்க விழாக்களையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்தான் நடத்தினோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற விழாக்கள் அங்கு தடையின்றி நடைபெற வேண்டுமென்றால், இந்த கட்டண உயர்வை இந்த அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
வெறும் நூலுக்கு அழகல்ல! பூ தொடுக்க வேண்டும். இதுபோன்ற அறிவுசார் விழாக்கள் நடந்தால்தான் நூலகத்திற்கும் அழகு! அதை விடுத்து வெறும் அரங்கத்தை மட்டும் அலங்கரித்து மாற்றம் என சொல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.