

சென்னை,
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி வரை முறைகேடாக பணம் வசூலித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த மாதம் 26-ந் தேதி தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சத் தியமூர்த்தி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ரூ.400 கோடி ஊழல் வழக்கில் கைதான அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மீது சென்னை சிறப்பு கோர்ட்டில் பரபரப்பு வாதம் நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் 10-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவலை வருகிற 18-ம் தேதி வரை நீட்டித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றக் காவல் இன்று முடிவடையும் நிலையில் புழல் சிறையிருந்து காணொலி மூலமாக சிறப்பு நீதிமன்றத்தில் மகேஷை சிறைத் துறையினர் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து அவரது காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.