

சென்னை,
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மாலை அணிந்து கடுமையான விரத முறைகளை பின்பற்றுவது வழக்கமாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
அந்த வகையில் பா.ம.க. தலைவர் அன்புமணி, சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காக முறைப்படி மாலை அணிந்து தனது விரதத்தைத் தொடங்கியுள்ளார். சென்னையில் உத்தண்டியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற அன்புமணி, அங்கு சாமி தரிசனம் செய்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். தொடர்ந்து அன்புமணியும் அவரது பேரக் குழந்தைகளும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.