

சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தை மாதத்தில் பூச நட்சத்திரமும், முழு நிலவும் ஒன்றாக வரும் நாளில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவையொட்டி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தைப்பூசத் திருநாள் வரலாற்றில் பல வகைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிவபெருமான், தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் ஆகியோரில் தொடங்கி வள்ளலார் வரை அனைவருடனும் தொடர்பு கொண்ட திருநாள் தைப்பூசத் திருநாள் ஆகும்.
தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தமிழீழம், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா என உலகின் அனைத்து மூலைகளிலும் உள்ள தமிழர்களால் இந்தத் திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்வில் வளமும், நலமும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.