அமோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அன்புமணி இரங்கல்

தனியார் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அன்புமணி
Published on

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்படும் தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் இன்று காலை ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை (2) ஆக அதிகரித்திருப்பதாகவும், 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

ஆழ்ந்த இரங்கல்

அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பவர்களுக்கு உயர்தர மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

தொழிற்சாலையில் முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாதது விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து முறையான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com