திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்

கே.ராஜன் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்
Published on

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தமிழ்த் திரையுலகில் சிறிய முதலீட்டில் திரைப்படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்கப் போராடியவர். பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சமூகநீதிப் போராட்டங்களில் பங்கேற்று ஆதரவளித்தவர்.

தயாரிப்பாளர் ராஜன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com