கரூரில் அன்புமணி நடைபயணம் 28ம் தேதிக்கு மாற்றம்


கரூரில் அன்புமணி நடைபயணம் 28ம் தேதிக்கு மாற்றம்
x

அன்புமணி நடைபயணத்தை சுட்டிக்காட்டி விஜய் பிரசாரத்திற்கு 27ம் தேதி காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தற்போது விஜய்க்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் 27ம் தேதி கரூரில் நடைபயண, பிரசாரம் மேற்கொள்ளவிருந்தார். அதே தேதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் அங்கு பிரசாரத்திற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தார். இந்த தேதியில் அன்புமணிக்கு அனுமதி கொடுத்ததால், விஜய்க்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், அன்புமணி தனது நடைபயணத்தை 28ம் தேதி மாற்றி விஜய்க்கு உதவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்புமணி பயணத்தை சுட்டிகாட்டி விஜய் பிரசாரத்திற்கு 27ம் தேதி காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தற்போது அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story