அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

வேலூர், திருப்பத்தூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜீலி, பொருளாளர் சரஸ்வதி மற்றும் துணைத்தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முரளி, செயலாளர் பரசுராமன், துணைத்தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு உள்ளுர், மாவட்ட இடமாறுதல் வழங்க வேண்டும். குழந்தைகள் குறைவாக இருக்கும் அங்கன்வாடி மையத்தை ஒன்றோடு ஒன்று இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். உணவு சமைப்பதற்கான செலவுகளை உயர்த்தி வழங்க வேண்டும். அங்கன்வாடி மையத்துக்கு ஆண்டிற்கு 4 சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com