அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெமிலியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் ராதா தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை பிரதான மையத்தோடு இணைப்பதை கைவிட வேண்டும், 10 ஆண்டுகள் பணி செய்த உதவியாளர்களுக்கு எவ்வித நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், தமிழகம் முழுவதும் சிலிண்டர் பில்லில் உள்ளபடி முழு தொகையையும் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள பஸ் கட்டணம், மைய வாடகை, கூடுதல் பொறுப்பு தொகை உடனடியாக வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் முழுவதும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் மாவட்ட சி.ஐ.டி.யு. தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் ஞானமுருகன், சங்க நிர்வாகிகள் விமலா, ரேவதி, லோகம்மாள் உள்பட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com