மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியதால் ஆத்திரம்: வாலிபரை தாக்கிய கணவர் கைது

படுகாயம் அடைந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியதால் ஆத்திரம்: வாலிபரை தாக்கிய கணவர் கைது
Published on: 

அம்மாபேட்டை,

மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியதால் ஆத்திரமடைந்த கணவன் வாலிபரை தாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். அவருடைய மகன் கோகுல்ராஜ் (வயது 34). சரக்கு வாகன டிரைவர். இவர் அதே பகுதியில் உள்ள திருமணமான பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அந்த பெண்ணின் கணவர் தேவராஜ், கோகுல்ராஜை கண்டித்துள்ளார்.

கைது

மேலும் ஆத்திரமடைந்த தேவராஜ் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான செந்தில் என்பவருடைய மகன் நந்தகுமார் (19), குழந்தை ராசு என்பவருடைய மகன் பிரசாந்த் (23), கோபால் என்பவருடைய மகன் தரனேஷ் (23) ஆகியோருடன் சேர்ந்து கோகுல்ராஜை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோகுல்ராஜ் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிவராஜ் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com