

சென்னை,
பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிவித்திருப்பதாவது:-
அண்ணா!
காலவெளியில்
உன் இருப்பு சிறிதுதான்
நீ வாழ்ந்தது
59.4 ஆண்டுகள்
உன் பொதுவாழ்வு
35 ஆண்டுகள்
கட்டியெழுப்பிய கட்சியோடு
19.5 ஆண்டுகள்
ஆட்சிப் பொறுப்பில்
வெறும் 22 மாதங்கள்
ஆனால்,
நீ செய்த சாதனை புரிய
300 ஆண்டு
வாழ்ந்தவனாலும் முடியாது
உன் பெயர் சொல்லாமல்
அரசாள இயலாது
உன் கொள்கை இல்லாமல்
அரசியல் கிடையாது
நீ
சாமானியர்க்காகவே வாழ்ந்தவன்;
சாமானியனாகவே மரித்தவன்
பூமியின் மீது
அதிகச் சிலைகள் புத்தருக்கு;
இந்தியாவில் அம்பேத்கருக்கு;
தமிழ்நாட்டில் உனக்கு
பொன்னடிகளுக்குப்
புகழ் வணக்கம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.