அண்ணா நினைவு தினம்: முதல் அமைச்சர் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது

முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அண்ணா நினைவு தினம்: முதல் அமைச்சர் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது
Published on

சென்னை,

முன்னாள் தமிழ் நாடு முதல் அமைச்சர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், திமுக சார்பில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அமைதிப் பேரணியானது சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு வாலாஜா சாலையில் நடைபெற்று வருகிறது.

தற்போது வாலாஜா சாலையில் நூற்றூக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பேரணியில், திமுகஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலர்கள், தொண்டர்கள் என பலர் கலந்துள்ளனர்.

பேரணியின் முடிவில் தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com