

சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை அவர்களின் பிறந்த தினம் இன்று.
மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக நின்றவர். ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் எதிராக வாழ்ந்தவர். எளிமையையும் நேர்மையையும் தனது அரசியல் வாழ்வில் கடைப்பிடித்தவர்.
தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.