'தளர்வில்லா வலிமையை நம் பிரதமருக்கு அளித்துவந்த அன்னை தீபம் அணைந்து விட்டது' - தமிழிசை இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
'தளர்வில்லா வலிமையை நம் பிரதமருக்கு அளித்துவந்த அன்னை தீபம் அணைந்து விட்டது' - தமிழிசை இரங்கல்
Published on

சென்னை,

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் தாயார் இன்று அதிகாலை சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். அவருக்கு வயது 99. பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவுக்கு தெலுங்கானா கவர்னரும் புதுச்சேரி துணை நிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

மழலையாய் பிறந்த மகனை...

பிறர் மலைப்புற வளர்த்து... உறுதியான

மலை என பொது வாழ்க்கையில்

உயரச் செய்து... உலகிலேயே

உயர்ந்த மனிதராய் உயர்த்தி

தன் தள்ளாத வயதிலும்... தளர்வில்லா

வலிமையை... உலகின்

வலிய தலைவராம்...நம்

பிரதமருக்கு...தற்போது மட்டுமல்ல

பிறந்ததிலிருந்து... அளித்துவந்த

அன்னை தீபம் அணைந்து விட்டது

எங்கள் பிரதமரின் அன்பு வெள்ளம் மறைந்ததைக் கேட்டு

எங்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம்

எதையும் தாங்கும்

எப்போதும் உள்ள உறுதியை

இப்போதும் நம் இறைவன் நம்

பிரதமருக்கு அருளட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com