

சென்னை,
இந்தியாவில் நீண்ட நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 4,398 நாட்கள் பதவியில் இருந்த நிலையில், பிரதமர் மோடி தனது மூன்றாவது தொடர்ச்சியான பதவிக்காலத்தில் தொடர்ந்து 4,399 நாட்கள் பதவியில் நீடித்து வருகிறார். பிரதமர் மோடியின் இந்த வரலாற்று சாதனை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
தமிழக பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி 'வீ தி லீடர்ஸ்' எனும் புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு தனது எக்ஸ் தள பதிவில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது;-
இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் பதவியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இன்று 4,399 நாட்களை நிறைவு செய்துள்ள நமது பிரதமர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
நாட்டிற்கான தனது சேவையை தொடர்ந்து மேற்கொள்ள, எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அளப்பரிய வலிமையையும் நல்வாழ்வையும் அருளட்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.