கரூரில் கல்லூரி பஸ் மீது சரக்கு ரெயில் மோதிய சம்பவம்… அண்ணாமலை வருத்தம்

விபத்தில் காயமடைந்த மாணவ, மாணவியர்கள் அபாயகட்டத்தில் இருந்து வெளிவந்து விட்டார்கள் என்ற செய்தி மனநிம்மதி அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.
கரூரில் கல்லூரி பஸ் மீது சரக்கு ரெயில் மோதிய சம்பவம்… அண்ணாமலை வருத்தம்
Published on

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

கரூர் மாவட்டம் ஜல்லிப்பட்டி அருகே, தனியார் ஆளில்லா ரெயில்வே கிராசிங்கில், கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. விபத்தில் காயமடைந்த மாணவ, மாணவியர்கள் அபாயகட்டத்தில் இருந்து வெளிவந்து விட்டார்கள் என்ற செய்தி மனநிம்மதி அளிக்கிறது. அவர்கள் அனைவரும் விரைவில் பூரண நலம்பெற, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

இது போன்ற நிகழ்வுகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மேலும் இது போன்ற நிகழ்வுகள் எங்கும் ஏற்படாமல் தடுக்க, தனியார் ரெயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

விபத்து குறித்த செய்தி அறிந்ததும் உதவிய பொதுமக்களுக்கும், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, மாணவ மாணவியரைச் சந்தித்து, ஆறுதல் கூறிய, தமிழக பாஜக கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கும், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com