மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
Published on

சென்னை,

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில்,

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள், சில நாட்களுக்கு முன்பு, கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களது படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த மீனவர்களின் வருமானத்தை தான் அவர்களது குடும்பத்தினர் நம்பி உள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை, சிறையில் இருந்து விடுவித்து, அவர்கள் தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com