அண்ணா பிறந்த நாள் விழா

அரியலூரில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
Published on

அண்ணா பிறந்த நாள் விழா

அரியலூர் நகரில் நேற்று அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் தலைமையில் அக்கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதேபோல் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு முன்பு இருந்து மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியதை செலுத்தினர்.

சிலைக்கு மாலை அணிவிப்பு

மேலும் அரியலூர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் சின்னப்பா எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com