தமிழ்நாட்டில் மேலும் ஒரு தடையற்ற சுங்கச்சாவடி

சென்னை-பெங்களூரு இடையே வேகமாக பயணிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுங்கச்சாவடி
Published on: 

சென்னை,

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுவதும் தடையற்ற சுங்கச்சாவடிகளை அமல்படுத்தி வருகிறது.

தடையற்ற சுங்கச்சாவடி

அங்கு வாகனங்களை நிறுத்தாமல் வேகமாக கடந்து செல்லலாம். தமிழ்நாட்டில், முதலில் பரனூர் சுங்கச்சாவடியும், 2-வதாக நெமிலி சுங்கச்சாவடியும் தடையற்ற சுங்கச்சாவடிகளாக மாற்றப்பட்டன.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை எண் 48-ல் கரைப்பேட்டை - வாலாஜாபேட்டை பிரிவில் சென்னசமுத்திரத்தில் 3-வது தடையற்ற சுங்கச்சாவடி அமலுக்கு வந்துள்ளது. இதனால், சென்னை-பெங்களூரு இடையே வேகமாக பயணிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X