

சென்னை,
தவெக தகவல்தொழில்நுட்பபிரிவு தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
ஆட்சியில் இருக்கும்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும், ஆட்சி பறிபோன பிறகு ம.தி.மு.க எம்.எல்.ஏ.க்களையும் விழுங்கி ஏப்பம் விட்ட ஒவ்வாமைநிதிக்கு, தானாக ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களை பார்த்து தாங்கள் செய்த ஒட்டகபேரம் நினைவுக்கு வந்து உறுத்துகிறதுபோலும். புதிதாகத் தொடங்கியுள்ள சோபா, மேஜை, நாற்காலி, வியாபாரத்தை மக்களிடம் பதியவைக்கவே சோபா மாடல் என்று சொல்லிச் சொல்லிப் பார்க்கிறார். தன் வியாபாரம் செல்ஃப் எடுக்காமல் சிதறிபதறுகிறார். மிகவும் கோபமாகி விரக்தியை கொட்டுகிறார்.
தீயசக்தி தி.மு.க.வின் கட்சிக்காரர்களும் திருட்டு மாடல் ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களும் அபார சுருட்டல்களில் சிக்கி வருவதால், தாங்கள் கண்டபடி கொள்முதல் செய்த நிதிகள் எல்லாம் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் அலறுகிறார். மூச்சுவிடக்கூட ஸ்கிரிப்ட்-ஐ நம்பி வாழும் இந்த ஸ்க்ரிப்ட் நிதி ஆட்சியை பிடிக்க மறைமுகமாக திட்டமிட்டு தொட்ட கதையும் தொடமுயன்று தோற்ற கதையும் அம்பலமாகுமோ என்று பதறுகிறார். பற்பல லிங்கங்களையும், பல்வேறு செல்வங்களையும் விற்பனை இயந்திரத்தில் போட்டு வெளுத்த தி.மு.க.வை, மக்கள் எதிர்வரும் இடைத்தேர்தலில் மட்டுமல்ல இனி வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெளுவெளுவென வெளுக்கப் போவது உறுதி.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.