

கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 19-ந் தேதி விஷ சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூ மருத்துவமனைக்கும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா.
இதில் சிகிச்சை பலனின்றி 6 பெண்கள் உள்பட 66 பேர் பரிதாபமாக உயிழந்தனா. 161 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்த நிலையில் 2 பேர் மட்டும் புதுச்சேரி ஜிப்மா மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனா.
இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரம் திருவரங்கம் நகரை சோந்த கண்ணன் (வயது 72) என்பவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பாதாபமாக உயிழந்தா. இதன் மூலம் இச்சம்பவத்தில் உயிரிழந்தவாகளின் எண்ணிக்கை 67 ஆக உயாந்தது. தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவா மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறா.