மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்.
மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு
Published on

திருச்சி பாரதி நகர் ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ராஜேந்திர பிரசாத் (வயது 52). இவர் அவரது நண்பர் மதுரை செல்வபுரம் பகுதியை சேர்ந்த பாலகுரு (23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருச்சி- காரைக்குடி பைபாஸ் சாலையில் புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். நமணசமுத்திரம் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜேந்திர பிரசாத், பாலகுரு ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திர பிரசாத் பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலகுருவும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com