மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி
Published on

வாணியம்பாடியை அடுத்த ராமநாயக்கன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 34). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆவாரங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மோகன் (24) என்பவருடன் நாட்றம்பள்ளி பகுதியில் இருந்து புத்துக்கோவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது கேத்தாண்டப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே கார் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ஜெயக்குமார் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோகன் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com