தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை- பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை- பீலா ராஜேஷ்
Published on

சென்னை

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது.

உலகளவில், சுமார் 12 ஆயிரம் பேர், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி, சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

250க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரசால் பாதித்தவர்களை காப்பாற்ற, தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் நிலையில், யுகான் உள்ளிட்ட சீன நகரங்கள், முற்றாக மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கெரேனா வைரஸ் அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், சீனாவில் இருந்து 579 பேர் இதுவரை தமிழகம் வந்துள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வந்த 3,223 பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய பீலா ராஜேஷ், தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com