ஆசிரியர் பணியிடங்களுக்கு 30ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் 30ம் தேதிக்குள் எழுத்து மூலமாகவோ, நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பிடலாம்.
ஆசிரியர் பணியிடங்களுக்கு 30ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
Published on

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நிரப்பிட தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016பிரிவு 19ன்படி முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதித்து ஆணையிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வட்டம், திருமங்கலகுறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஒன்றும், விளாத்திகுளம் வட்டம் ஒ.லட்சுமிநாராயணபுரம் அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் ஒன்றும், கயத்தார் வட்டம் கரிசல்குளம் அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் ஒன்றும் காலியாக உள்ளது.

மேற்சொன்ன காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதிபெற்ற நபர்களைக் கொண்டு நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15,000 மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 வீதம் தொகுப்பூதியத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட உள்ளது. தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 30.6.2025க்குள் எழுத்து மூலமாகவோ/ நேரடியாகவோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்பிடலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com