பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்
பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
Published on

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வருகிற ஜனவரி மாதம் 26-ந்தேதி குடியரசு தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப்பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. எனவே தேனி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள நபர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பத்ம விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். www.padmaawards.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 15-ந்தேதி கடைசி நாள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com