சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதிக்காக பாடுபடுவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் ரொக்கமும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. விருதுக்கு தகுதியானவர்கள் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து சேரும்படியாக அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com