சென்னை ஐகோர்ட்டுக்கு 3 நீதிபதிகள் நியமனம் - ஐனாதிபதி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டுக்கு 3 நீதிபதிகளை நியமனம் செய்து ஐனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டுக்கு 3 நீதிபதிகள் நியமனம் - ஐனாதிபதி உத்தரவு
Published on

சென்னை,

மதுரை மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி வகித்து வரும் பி.வடமலை. இவரை, சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்க ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதன்படி சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக பி.வடமலையை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஆந்திரா ஐகோர்ட்டு நீதிபதி பட்டு தேவ்ஆனந்த், தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதி தேவராஜூ நாகார்ஜூன் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதன்படி இவர்கள் இருவரையும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மூன்று நீதிபதிகளும் விரைவில் ஐகோர்ட்டில் பொறுப்பு ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com