பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள தற்காலிக பணியாளர்கள் நியமனம்

கடலூர் மாவட்டத்தில் பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள தற்காலிக பணியாளர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள தற்காலிக பணியாளர்கள் நியமனம்
Published on

கடலூர்

பயிர்காப்பீடு திட்டம்

கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள 15 பயிர் அறுவடை சோதனை பணியாளர்கள் மற்றும் 1 பயிர் சோதனை ஒருங்கிணைப்பாளரை முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அயலாக்க பணித்தேர்வு முகமை மூலம் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள தோட்டக்கலை சார்ந்த இளநிலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புடன் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும், தோட்டக்கலை துறை மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்களும் இப்பணியில் சேர ஆர்வமிருந்தால் தேர்வு செய்ய பரிசீலிக்கப்படுவர்.

3 ஆண்டு அனுபவம்

சம்பந்தப்பட்ட பணித்தேர்வு முகமை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்து வழங்குவதில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆகவே இப்பணியினை மேற்கொள்ள தகுதி வாய்ந்த, பதிவுத்துறையின் கீழ் பதிவு செய்து செயல்பட்டு வரும் அயலாக்க பணித்தேர்வு முகமை மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வழங்க, தங்களது முகமையின் அடிப்படை விவரங்கள், அனுபவம் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் விவரம், சேவை கட்டணம் ஆகியவற்றை தோட்டக்கலை துணை இயக்குநர், செம்மண்டலம், கடலூர் மாவட்டம். மின்னஞ்சல் ddhcuddalore@yahoo.com, dd.dohpc.cud@tn.gov.in என்ற முகவரிக்கு வருகிற 20-ந் தேதி(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேர்வு செய்யப்படும் முகமையினர் உடனடியாக ஒப்பந்த பணியாளர்களை தேர்வு செய்து வழங்க வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com