6 தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

6 தையல் ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணைகளை அமைச்சர் ராஜ் மோகன் வழங்கினார்.
6 தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை
Published on

சென்னை,

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6 தையல் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இதில், பள்ளி கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் கலந்துகொண்டு, 6 தையல் ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, பள்ளி கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்திர மோகன், பள்ளி கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) மு.ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com