அண்ணா நூலகத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் உயர்வா? - தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு

நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியது.
தகவல் சரிபார்ப்பகம்
Published on

சென்னை,

தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அண்ணா நூலகத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக பரவும் தவறான தகவல்.

பரவும் செய்தி

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

உண்மை என்ன ?

இது முற்றிலும் தவறான தகவலாகும்.

இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகம் அளித்துள்ள விளக்கத்தில், "கலையரங்கம், நூல் வெளியீட்டுக்கூடம், மாநாட்டுக்கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவை அரசாணை (நிலை) எண்.152 பள்ளிக் கல்வித்துறை (பொது.நூ) நாள் 04.07.2017-இன் படி குறிப்பிடப்பட்டுள்ள வாடகைக் கட்டணத்தின் அடிப்படையில், இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் இல்லாமல் வாடகைக்கு விடப்படுகிறது. மேற்கண்ட அரங்குகளுக்கு எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவலைப் பரப்பாதீர்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com