திமுக கூட்டணியில் இணைகிறீர்களா? - டாக்டர் ராமதாஸ் பதில்


திமுக கூட்டணியில் இணைகிறீர்களா? - டாக்டர் ராமதாஸ் பதில்
x
தினத்தந்தி 12 Jan 2026 11:34 AM IST (Updated: 12 Jan 2026 11:36 AM IST)
t-max-icont-min-icon

நாட்கள் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சென்னை,

சென்னையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தேர்தல் நேரத்தில் பலவிதமான யூகங்கள்; பலவிதமான பேச்சுகள், உண்மையும் இருக்கும், பொய்யும் இருக்கும். அதை நீங்கள் (ஊடக நண்பர்கள்) எப்படி எடுத்துக்கொள்வீர் என்பதை பொறுத்து. பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் என்னிடம் தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை.

கேள்வி:- உங்களுடைய விருப்பம் என்ன?, தே.ஜ.கூட்டணியில் இருந்து இல்லை என்பது குறித்து நீங்கள் முடிவு எடுத்துவிட்டீர்களா..?..

பதில்:- இது இன்னும் முடிவு எடுக்கவில்லை. நாட்கள் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது; விரைவில் முடிவு எடுப்போம்.

கேள்வி:- புதிய கூட்டணிக்கு போவதற்கான சூழல் உருவாகியுள்ளதா?

பதில்:- நீங்கள் என்ன சொல்கிறீர்கள் (பத்திரிகையாளர்களை நோக்கி). தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்; நடக்காமலும் போகலாம். தேர்தல் நேரத்தில் எதையும் உறுதிபட சொல்ல முடியாது.

கேள்வி:- திமுக கூட்டணி பேச்சுவார்த்தை பரிசீலனையில் உள்ளதா?

பதில்:- ஆமாம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story