

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கிய திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதையடுத்து திமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையை இன்னும் சற்று நேரத்தில் வெளியிட உள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடே... தலைப்புச் செய்திக்கு ரெடியா? என்று கேள்வி எழுப்பி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.