அருணாசலேஸ்வரர் கோவிலின் தேர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

தேர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
Published on: 

திருவண்ணாமலை,

அருணாசலேஸ்வரர் கோவிலின் தேர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 15-ந் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. விழாவின் 7-ம் நாளில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை விநாய கர் தேர், முருகர் தேர், அருணாசலேஸ்வரரின் மகா ரதம், பராசக்தி அம்மன் தேர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர் ஆகி யவை தனித்தனியாக ஒன்றன் பின் ஒன்றாக மாட வீதியில் வலம் வரும்.

இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள தேரடி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்ச மூர்த்திகளின் தேர்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் தேர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

X