ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பதவி பறிப்பு; பகுஜன் சமாஜ் நடவடிக்கை


ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பதவி பறிப்பு; பகுஜன் சமாஜ் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 April 2025 8:58 AM IST (Updated: 15 April 2025 1:39 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங்

சென்னை

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின்போது பொற்கொடி தனது ஆதரவாளர்களை திரட்டி மாநில தலைவர் ஆனந்தன் தனக்கு எதிராக செயல்படுவதாகவும், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும் கட்சியின் மேலிட பிரதிநிதிகளுடன் புகார் அளித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story