நிலத்தகராறில் விவசாயியை தாக்கியவர் கைது

நிலத்தகராறில் விவசாயியை தாக்கியவர் கைது
Published on

மத்தூர்:

போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டி அருகே உள்ள மலையாண்டஅள்ளியை சேர்ந்தவர் தீர்த்தகிரி (வயது 47). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (50). உறவினர்கள். இவர்களுக்குள் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி தீர்த்தகிரி வளர்த்து வந்த மாடு, மனோஜ் நில பகுதிக்கு சென்று பயிர்களை தின்றதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதில் தீர்த்தகிரியை மனோஜ் தரப்பினர் தாக்கினர். இதுகுறித்து தீர்த்தகிரி மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மனோஜ் மகன் அரவிந்த் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மலும் மனோஜ் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

======

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com